வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 1 Aug 2017 12:30 AM GMT (Updated: 31 July 2017 12:08 PM GMT)

விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பி என்ற இடத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பி என்ற இடத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சோடச லிங்கம் உள்ளது. நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட, ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5½ அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்களின் மீது கம்பீரமாக இந்த லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை கையால் தட்டிப்பார்த்தால் அதில் இருந்து வெண்கல ஒலியின் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பாகும்.

Next Story