நவராத்திரியில் நவ தானியம்
நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம்.
நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். வந்ஹி துர்க்கா, வன துர்க்கா, ஜல துர்க்கா, ஸ்தூல துர்க்கா, விஷ்ணு துர்க்கா, பிரம்ம துர்க்கா, ருத்ர துர்க்கா, மகா துர்க்கா, சூலினி துர்க்கா போன்ற அன்னைகளின் சக்திகளை ஒவ்வொரு உயிரும் வாழ்வில் பெற்றிருக்கும். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நவராத்திரி விழாவில் தேவதைகளைச் சிறப்பிக்க வேண்டும்.
நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம்.
நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒவ்வொரு நவதானியமாக ஒன்பது வகை சுண்டல் செய்து கடவுளுக்குப் படைத்து வழிபடுவர். நவதானிய வகைகள் வருமாறு:-
* கோதுமை * பச்சரிசி * துவரை * பச்சைப்பயறு * கடலை * மொச்சை * எள்ளு * உளுந்து * கொள்ளு
Related Tags :
Next Story