மங்கலம் தரும் மஞ்சள்


மங்கலம் தரும் மஞ்சள்
x
தினத்தந்தி 11 Oct 2017 4:06 PM IST (Updated: 11 Oct 2017 4:06 PM IST)
t-max-icont-min-icon

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப் படுகிறது.

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப் படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து, மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி, தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம்.

சுமங்கலிப் பெண்கள் வீட்டிற்கு வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள். இங்ஙனம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்பு கிறார்கள். நீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தைப் பார்க்கும் பொருட்களில் உபயோகப்படுத்துவது வழக்கம். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஜவுளிக் கடைகளில் கொடுக்கும் பை களில் கூட பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலேயே கொடுப்பார்கள். மஞ்சள் மங்கலத்தை அறிவிக்கும் நிறம். புத்தாடை அணியும் பொழுது மஞ்சள் தடவி அணிந்தால் ஆடை, அணி கலன்கள் சேரும் என்பது நம்பிக்கை. 
1 More update

Next Story