ஆன்மிகம்

இந்த வார விசே‌ஷங்கள் : 24–10–2017 முதல் 30–10–2017 வரை + "||" + Occasions this week

இந்த வார விசே‌ஷங்கள் : 24–10–2017 முதல் 30–10–2017 வரை

இந்த வார விசே‌ஷங்கள் : 24–10–2017 முதல் 30–10–2017 வரை
சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் ரத உற்சவம், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
    24–ந் தேதி (செவ்வாய்)

    சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் ரத உற்சவம், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.

    குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.

    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

    25–ந் தேதி (புதன்)

    கந்த சஷ்டி.

    திருச்செந்தூர் சுப்பிர   மணியர் கோவில் உள்பட அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம்.

    சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில், அசுரர்களை அழித்து மயில் வாகனம் மற்றும் சேவல் கொடியுடன் முருகப்  பெருமான் இந்திர  விமானத்தில் பவனி.

    குமாரவயலூர் முருகப்பெருமான் சக்திவேல் வாங்குதல்.

    கீழ்நோக்கு நாள்.

    26–ந் தேதி (வியாழன்)

    சகல முருகப்பெருமான் கோவில்களிலும், தெய்வானை திருக்கல்யாண உற்சவம்.

    சிக்கல் சிங்காரவேலவர் சூர்ணோற்சவம், மாலை தங்கக் குதிரையில் இரவு தேவசேனாவை மணந்து வெள்ளி ரதத்தில் பவனி.

    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    கீழ்நோக்கு நாள்.

    27–ந் தேதி (வெள்ளி)

    முகூர்த்த நாள்.

    சிக்கல் சிங்காரவேலவர் வள்ளி தேவியை மணந்து இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி.

    வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.

    திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

    மேல்நோக்கு நாள்.

      28–ந் தேதி (சனி)

    திருவோண விரதம்.

    திருக்கோட்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல்  உற்சவ சேவை.

    சிக்கல் சிங்கார வேலவர் விடையாற்று உற்சவம்.

    திருவனந்தபுரம், திருவட்டாறு ஆகிய தலங் களில் சிவபெருமான் ஆராட்டு விழா.

    மேல்நோக்கு நாள்.

    29–ந் தேதி (ஞாயிறு)

    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    திருக்கோட்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.

    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில்      சந்திரசேகரர் புறப்பாடு.

    மேல்நோக்கு நாள்.

    30–ந் தேதி (திங்கள்)

    முகூர்த்த நாள்.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    மேல்நோக்கு நாள்.