ஆன்மிகம்

மாப்பிள்ளை பெருமாள் + "||" + Mappillai Perumal...Chauri Raja Perumal

மாப்பிள்ளை பெருமாள்

மாப்பிள்ளை பெருமாள்
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சவுரிராஜப் பெருமாள் கோவில் உள்ளது.
சவுரிராஜப் பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள சவுரிராஜப் பெருமாள், புராணகாலத்தில் பட்டினச்சேரி கடற்கரைப் பகுதிக்கு எழுந்தருளியதாகவும், அங்கு நிலா வெளிச்சத்தில் அழகிய மங்கை தாயாரை கண்டு காதல் வயப்பட்டதாகவும் தல புராணம் சொல்கிறது. பத்மினி என்று அழைக்கப்பட்ட மீனவப் பெண்ணே, அழகிய மங்கை ஆவார். அவரை பெருமாள் மணம் முடித்துக் கொண்டார் என்கிறது தல புராணம். இந்த ஆலயத்தில் சவுரிராஜப் பெருமாள், மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பத்மினி நாச்சியாருடன் காட்சியளிப்பதை காணலாம்.


சவுரிராஜப் பெருமாள், பத்மினி நாச்சியாரை காண்பதற்காக பட்டினச்சேரி கடற்பகுதிக்கு வரும் நிகழ்வானது, ஆண்டு தோறும் ஆலயத்தில் ஒரு நிகழ்வாக நடந்து வருகிறது. தங்களது குலத்தை சேர்ந்த பெண்ணை சவுரிராஜப் பெருமாள் மணம் முடித்துக்கொண்டதால், மீனவ சமுதாய மக்கள் அனைவரும் சவுரிராஜப் பெருமாளை தங்களது மருமகனாக (மாப்பிள்ளை பெருமாள்) பாவித்து இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.

சவுரிராஜப் பெருமாள் மாசி மக தினத்தன்று, பட்டினச்சேரி கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக எழுந்தருள்வார். அப்போது அவருக்கு சிறப்பான முறையில் மீனவர்கள் வரவேற்பு அளிக் கிறார்கள். இதற்காக அன்றைய தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.