பக்தன் எப்படி இருக்க வேண்டும்?


பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
x
தினத்தந்தி 9 May 2018 6:32 AM GMT (Updated: 9 May 2018 6:32 AM GMT)

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்று கந்த புராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

* தெளிவான அறிவோடு இருக்க வேண்டும்.

* எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச வேண்டும்.

* உணர்ச்சியை வென்றவனாக நடந்துகொள்ள வேண்டும்.

* எவரிடமும் எந்த விதத்திலும் பகைமை பாராட்டா திருக்க வேண்டும்.

* எப்பொழுதும் கருணை கொண்ட மனதுடன் இருக்க வேண்டும்.

* தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.

* நல்ல காரியங்கள் செய்பவனாகவும், பிறர் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவனாகவும் இருக்க வேண்டும்.

* எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்.

* ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.

* பிறர் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு உதவ முன்வர வேண்டும்.

சாஸ்தா கரத்தில் லிங்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது மார்க்கண்டேய சாஸ்தா ஆலயம். இந்த சாஸ்தாவின் விக்கிரகத்தில் வலது கை வழக்கமான அபய முத்திரையைக் காட்டாமல், சிவலிங்கத்தை வைத்தபடி காணப்படுகிறது.

சர்க்கரை- ரவை வழிபாடு

தஞ்சாவூர்- நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள கோவில்வெண்ணி தலத்தில் கரும்பேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் கரும்பேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சர்க்கரையும் ரவையும் கலந்து, எறும்புக்கு வைத்து வழிபட்டால், சர்க்கரை நோய் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

-ஆர்.சரஸ்வதிராஜ், அமைந்தகரை.

Next Story