ஓம் வடிவ மலையில் குடவரை கோவில்


ஓம் வடிவ மலையில் குடவரை கோவில்
x
தினத்தந்தி 10 Oct 2018 7:37 AM GMT (Updated: 10 Oct 2018 7:37 AM GMT)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மூவரைவென்றான் கிராமம் லிங்ககிரி மலையில் அமைந்திருக்கிறது, குடவரை கோவில்.

இங்கு மலைக்கொழுந்தீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது.

பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த தலமானது, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மீது எழிலுற காட்சி தரும் இந்தக் கோவிலில் மூலவராக மலைகொழுந்தீஸ்வரர் அருளாட்சி செய்கிறார். இறைவியின் திருநாமம் மரகதவள்ளி என்பதாகும்.

இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறியும் விதமாக கல்வெட்டுகளும், பல்லவர்களின் சின்னமான சிங்கமும் கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கோவிலில் அமைந்திருக்கும் லிங்ககிரி மலையை ‘மொட்டை மலை’ என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். மலையின் மீது பாறையை குடைந்து, 26 அடி நீளமும், 20 அடி அகலத்திலும் இந்தக் கோவிலை வடிவமைத்து இருக்கிறார்கள்.

கோவிலின் உட்புறத்தில் உள்ள பாறைகளில் கற்பக விநாயகர், ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான், ருத்திர தாண்டவ கோலத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிலைகள் காட்சி தருகின்றன. இந்த மலை ‘ஓம்' வடிவத்தில் அமைந்திருப்பது சிறப்புக்கெல்லாம் சிறப்பானது என பக்தர்கள் சிலாகித்து கூறுகிறார்கள்.

இந்த தலத்தில் நந்தி சிலை, லிங்கத்திற்கு அருகிலேயே இருக்கிறது. மண்டபத்தின் வழி யாக கோவிலுக்கு செல்லும் போது, இதைப் பார்த்தால் நந்தி சிலை மீது சிவலிங்கம் இருப் பது போன்ற தோற் றம் அளிக்கும் என பக்தர்கள் கூறு கிறார்கள். சிவலி ங்கம் மற்றும் பரி வார தெய்வ ங்களு க்கு அபிஷேகம் செய்வதற்காக முன்பு திருவோடு வடிவத்தில் உள்ள திருவோட்டுக் கேணி எனப்படும் நீர்நிலையை பயன்படுத்தி வந்தனர்.

மலையின் நடுவே உள்ள இந்த கேணியில் இருந்து தண்ணீர் எடுத்து வர சிரமமாக இருந்ததால், சித்தர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அர்ச்சுனன் பானம் விட்டு மலையின் நடுவே ஒரு சுனையை உருவாக்கியதாகவும், இந்த சுனை ‘ஆகாய கங்கை’ எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆகாய கங்கை தீர்த்தம் கோவில் மண்டபத்திற்குள் வரு வதற்காக, மலையின் ஒரு பகுதியில் கால்வாய் போன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆகாய கங்கை தீர்த்தத்தில் தான் மூலவர் மற்றும் பரி வார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அர்ச்சு னன் பானம் விட்டு சுனை உருவாக்கியதால், இதில் இருந்து உருவாகி செல்லும் நதியை ‘அர்ச்சுனா நதி' என்கிறார்கள்.

தொழில் விருத்தி, குழந்தை பாக்கியம் வேண்டியும், கடன்தொல்லை தீரவும், வேலை கிடைக்கவும் மலை கொழுந் தீஸ் வரரை வணங்கிச்சென்றால் எல்லாம் ஜெயமே. தற்போது மலை கொழுந்தீஸ்வரர் சன்னிதி அருகே நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மரகதவள்ளி அம்பாள், குடவரை கோவிலுக்குள் இல்லாமல் தனியாக மண்டபத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் சித்திரை 1-ந்தேதி திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது சப்பரத்தில் சாமியும் அம்பாளும் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். பிரதோஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

பவுர்ணமி தினங்களில் கிரிவலம் நடைபெறும். இந்த கோவிலின் நடை தினமும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 2 மணிக்கு சாத்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பள்ளியறை பூஜையுடன் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

தமிழரின் கட்டிடக்கலையை மலைகொழுந்தீஸ்வரர் கோவிலில் காணலாம். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.

Next Story