ராமேசுவரத்தில் 12 ஜோதிர்லிங்க புதிய சிவன் கோவில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்


ராமேசுவரத்தில் 12 ஜோதிர்லிங்க புதிய சிவன் கோவில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 7:26 PM GMT)

தமிழகத்திலேயே முதல் முறையாக ராமேசுவரத்தில் 12 ஜோதிர்லிங்கம் சிவன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவில் அருகே மண்டி தெருவில் பிரஜாபிதா, பிரம்மகுமாரிகள், ஈஸ்வர்ய விஷ்வவித்யாலயம் சார்பில் சிவன் கோவில் புதிதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. புதிய சிவாலயத்தை மும்பையில் உளள் ராஜயோக கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டளையின் தலைவி யோகினி, பிரம்மகுமாரிகள் மதுரை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி,தமிழக,புதுச்சேரி பிரம்மகுமாரிகள் ஒருங்கிணைப்பாளர் பீனா,ராமநாதபுரம் ராஜாகுமரன்சேதுபதி,ராணி லட்சுமிநாச்சியார்,பண்புக்கல்வி நிகழ்வுகள் இயக்குனர் பாண்டியமணி,கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசிஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து சிவன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர் லிங்கங்களும், சொர்க்கத்தை குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்த சிற்பங்கள் மற்றும் தியானஅறை திறந்து வைக்கப்பட்டது.

சிவன் கோவிலில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவிலை குறிக்கும் விதமாக ராமேசுவரம் ராமநாதசாமி உட்பட பல மாநிலங்களில் உள்ள சோமநாதர், நாகேசுவரர், வைத்தியநாதர், கிருஷ்ணேசுவரர், மகாகாளேசுவரர், கேதார்நாதர்,மல்லிகார்ஜினர், பீமாசங்கர், திரியம்பகேசுவரர், விசுவநாதர்,ஓம்காரேசுவரர் என 12 ஜோதிர்லிங்கங்களும் சிவன் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்ததை ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் உமா, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்,ரோட்டரி கிளப் தலைவர் கருப்பையா,என்ஜினியர் முருகன்,ராமநாதன்,கோவில் சூப்பிரண்டு ககாரின்ராஜ்,பேஷ்கார்கள் கலைச்செல்வன்,கமலநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே 12 ஜோதிர்லிங்கம் ஒரே இடத்தில் அமைந்துள்ளது ராமேசுவரத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 12 ஜோதிர்லிங்கத்தை காலை 9 மணி முதல் 2 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என பிரம்மகுமாரிகள் தியானநிலையம் தெரிவித்துள்ளது.

Next Story