இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 22 Jan 2019 7:18 AM GMT (Updated: 22 Jan 2019 7:18 AM GMT)

22-1-2019 முதல் 28-1-2019 வரை

22-ந் தேதி (செவ்வாய்)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.

கோயம்புத்தூர் பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தெப்ப உற்சவம்.

சென்னை சிங்காரவேலவர் கோவில் தெப்ப உற்சவம்.

திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் சப்தாவரணம்.

பழனி முருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி.

காஞ்சீபுரம் வரதராஜர் தெப்ப உற்சவம்.

சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (புதன்)

முகூர்த்த நாள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம், சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.

பழனி முருகப்பெருமான் பெரிய தங்க மயில் வாகனத்தில் பவனி.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (வியாழன்)

சங்கடஹர சதுர்த்தி.

பழனி முருகப்பெருமான் காலை தோளுக்கினியானிலும், இரவு தெப்பத் தேரிலும் பவனி.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

கீழ்நோக்கு நாள்.

25-ந் தேதி (வெள்ளி)

திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.

திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் பவனி வருதல்.

திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிக்கை புறப்பாடு கண்டருளல்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

மேல்நோக்கு நாள்.

26-ந் தேதி (சனி)

குடியரசு தினம்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

சமநோக்கு நாள்.

27-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கருட சேவை.

சமநோக்கு நாள்.

28-ந் தேதி (திங்கள்)

சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

சமநோக்கு நாள்.


Next Story