இந்த வார விசேஷங்கள் : 29-1-2019 முதல் 4-2-2019 வரை


இந்த வார விசேஷங்கள் : 29-1-2019 முதல் 4-2-2019 வரை
x
தினத்தந்தி 29 Jan 2019 2:36 PM GMT (Updated: 29 Jan 2019 2:36 PM GMT)

29-ந் தேதி (செவ்வாய்) சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (புதன்)

முகூர்த்த நாள்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

திருப்பதி ஏழுமலையப்பன் ஆலயத்தில் சுவாமிக்கு சகசர கலசாபிஷேகம்.

சமநோக்கு நாள்.

31-ந் தேதி (வியாழன்)

சர்வ ஏகாதசி.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம். காலை சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி பவனி.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

சமநோக்கு நாள்.

1-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி வருதல்.

திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

கீழ்நோக்கு நாள்.

2-ந் தேதி (சனி)

சனிப் பிரதோஷம்.

மாத சிவராத்திரி.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் திருவீதி உலா.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

இன்று மாலை அனைத்து சிவாலயங்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (ஞாயிறு)

திருவாவடுதுறை சிவன் கோவில், கல்லிடைக்குறிச்சி சூரியநயினார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி வருதல்.

வைத்தீஸ்வரன் கோவிலில் முத்துக்குமாரசாமி உற்சவம் தொடக்கம்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலகாப்பு உற்சவ காட்சி.

மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (திங்கள்)

தை அமாவாசை.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம்.

மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாற்றி அருளல்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், இரவு யாழி வாகனத்தில் பவனி.

மேல்நோக்கு நாள்.

Next Story