ஆன்மிகம்

புராண கதாபாத்திரங்கள் + "||" + Mythological characters

புராண கதாபாத்திரங்கள்

புராண கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம்.
இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

மண்டோதரி

மாயாசுரன் என்ற மயன் பாதாள உலகில் உள்ள அசுரர்களுக்கான கட்டிடங்களை வடிவமைப்பவன். மிகப்பெரும் அரசனும் ஆவான். அவனது மகள் தான் மண்டோதரி. இவளை இலங்கையை ஆட்சி செய்து வந்த அசுரர்களின் தலைவனான ராவணன் மணம் முடித்துக் கொண்டான். மண்டோதரி பேரழகு வாய்ந்தவள் என்று ராமாயண காவியம்  எடுத்துரைக்கிறது. அவள் எவ்வளவு அழகு வாய்ந்தவள் என்றால், ஒரு முறை அனுமன், சீதை இலங்கையில் தான் இருக்கிறாளா என்று பார்த்துவருவதற்காக வந்தார். அப்போது முதலில் அவர் பார்த்தது மண்டோதரியை தான். அவளின் அழகை வைத்து, அவள் தான் சீதை என்று முதலில் நினைத்தார் அனுமன். பின்னர் தான் அவள் ராவணனின் மனைவி என்பது தெரியவந்தது. மண்டோதரி, கடவுள் மீது அதீத நம்பிக்கையும், பக்தியும் கொண்டவள்.. சீதையை மீண்டும் ராமனிடம் அனுப்பி விடும்படி, அவள் பலமுறை ராவணனிடம் வேண்டிக்கேட்டுக் கொண்டாள். மண்டோதரி என்பதற்கு ‘மெல்லிய வயிறுடையவள்’ என்று பொருள்.

மனுஸ்மிரிதி

மனு என்பவர் எழுதிய நூலின் பெயரே ‘மனுஸ்மிரிதி’ ஆகும். இந்த நூலானது 12 பாகங்களைக் கொண்டது. கி.மு. 500-ல் எழுதப்பட்டதாக அறியப்படும் இந்த நூல், பல சாஸ்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்து மதத்தின் விதிகள் அனைத்தும் இந்த ‘மனுஸ்மிரிதி’ நூலில் குறிப்பிடப்பட்டு இருப்பவையே என்று சொல்கிறார்கள்.

மன்மதன்

கரும்பை வில்லாகவும், தேனீக்களை நாணாகவும், மணம் நிறைந்த மலர்களை அம்பாகவும் கொண்ட காதல் கடவுள் தான் மன்மதன். தாரகன் என்னும் அரக்கன் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். சிவபெருமானுக்கு பிறக்கும் மகனால் மட்டுமே அவனை அழிக்க முடியும். எனவே சிவன்- பார்வதியை மணந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தையே தாரகனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் எண்ணினர். அதனால் தவத்தில் இருந்த ஈசனை விழிப்படையச் செய்ய, மன்மதனைக் கொண்டு காதல் அம்பு வீசச் செய்தனர். ஆனால் தவத்தை கலைத்த குற்றத்திற்காக, தனது நெற்றிக்கண்ணை திறந்து, மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். பின்னர் ரதிதேவியின் வேண்டுதல்படி, அவள் கண்களுக்கு மட்டுமே தென்படுவான் என்ற நிபந்தனையுடன், மன்மதனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

மகிஷன்

அசுரர்களின் அரசன். எருமை தலையைக் கொண்டவன் என்பதால் அவனுக்கு ‘மகிஷன்’ என்று பெயர் வந்தது. தண்டாயுதத்தை ஆயுதமாகக் கொண்டவன். மகிஷன் மூவுலகையும் ஆண்டு வந்தான். இறுதியில் தேவர்களுடனும் போர் புரிந்தான். அந்த போரில் நூற்றுக்கணக்கான தேவர்கள் அழிந்தனர். இறுதியில் மகிஷன் தேவலோகத்தையும் கைப்பற்றி, எஞ்சியிருந்த தேவர்களையும் கைதிகளாக சிறையில் அடைத்தான். ஆண்களால் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தை மகிஷன் பெற்றிருந்தான். எனவே விஷ்ணு ஒரு தேவியை உருவாக்கி, அந்த தேவிக்கு எல்லா தேவர்களின் சக்தியையும் வழங்கினார். இதையடுத்து அந்த தேவியானவள், மகிஷனுடன் போரிட்டு அவனை வதம் செய்தாள். இதனால் அவள் ‘மகிஷாசுரமர்த்தினி’ என்று அழைக்கப்பட்டாள்.

தொடர்புடைய செய்திகள்

1. புராண கதாபாத்திரங்கள்
மார்க்கண்டேயன்: மிருகண்ட மகரிஷி, வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவித்து வந்தார். அவருக்கு புத்திர பாக்கியம் அளித்த சிவன் “உனக்கு அறிவில் சிறந்த இறை பக்தி கொண்ட, 16 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவிலியாக இறைபக்தி அற்று பல ஆண்டு உயிர்வாழும் குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.
2. புராண கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...
3. புராண கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...
4. புராண கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..