ஏழுமலை


ஏழுமலை
x
தினத்தந்தி 19 Feb 2019 11:07 AM GMT (Updated: 19 Feb 2019 11:07 AM GMT)

திருப்பதி வெங்கடாசலபதியை ‘ஏழு மலையான்’ என்றும் அழைப்பார்கள்.

ஏழு மலையின் மீது வீற்றிருப்பதால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது. கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அவை, எருது மலை, கரு மலை, சைல மலை, பாம்பு மலை, கருட மலை, நாராயண மலை, வேங்கட மலை.

எட்டு வித மலர்கள்

இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவை, செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு மலர், புன்னை மலர், செந்தாமரை, அலரி ஆகியவையாகும்.

ஒன்பது வகை துளசி

பெருமாளுக்கு உகந்த அர்ச்சனைப் பொருட்களில் ஒன்று துளசி. பெருமாள் ஆலயங்களில் துளசியை தீர்த்தமாகத் தருவார்கள். அது உடலுக்கு அருமருந்தாக அமைந்தது. துளசியில் ஒன்பது வகையான துளசிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை இங்கே பார்க்கலாம். கருந்துளசி, கற்பூரத் துளசி, காட்டுத் துளசி, கரிய மால் துளசி, செந்துளசி, நாமத் துளசி, பெருந்துளசி, சிவ துளசி, நீலத் துளசி.

ஒன்பது தீர்த்தங்கள்

நம் நாட்டில் ஒன்பது வகையான புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, காவிரி, குமரி, பாலாறு, சரயு ஆகியவையாகும். இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஒருவரின் முன்ஜென்ம பாவங்கள் மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் மட்டுமல்லாது, அவரது பல தலைமுறை சந்ததியினரின் பாவங்களும் கூட கரைந்து போகும்.

Next Story