ஆன்மிகம்

கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள் + "||" + Benefits of going to the temple

கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள்

கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள்
ஆலயம் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டும் இல்லை. அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மனிதனை கட்டுக்குள் வைக்கும் ஒரு ஆரோக்கியத்தின் பிறப்பிடம்.
அத்தகைய இடத்திற்குச் சென்று விக்கிரகங்களையும், தீபத்தையும் மட்டும் தரிசித்து விட்டு வராமல், அங்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்வது நல்லது.

சாஸ்திரப்படி அமைக்கப்படும் ஆலயங்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்புறத்திலோ, ஊர் நடுவிலோ, மலை உச்சியிலோதான் அந்த காலத்தில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. சமதளமான இடத்தைவிட மலை உச்சியில் அமைந்துள்ள கோவில் களுக்கு சக்தி அதிகமாகும்.

கோவிலின் மையப் பகுதியில் கர்ப்பக்கிரகம் அமைக்கப்படுகிறது. கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் மூலவர் விக்கிரகத்தின் அடியில் யந்திரங்களை பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத் தகடுகளே யந்திரங்களாக கருதப்படுகின்றன. பூமியின் காந்த அலைகளை, இந்தச் செப்புத் தகடுகள் உள்வாங்கி, ஆலயத்தின் சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. கர்ப்பக்கிரகத்தை வலம் வரும் பக்தர்களின் உடலில் இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. இது பக்தர்களுக்கு நன்மை செய்வதாக ஆய்வாளர்கள் தொிவிக்கின்றனர்.

கோவில் பிரகாரத்தை 11 முறை, 108 முறை என்று வலம் வரும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக குறைந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோவிலுக்குச் சென்று வலம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத் துணர்ச்சி பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
2. கோவில் இடத்தில் இருந்த பாதை அகற்றம்
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற உத்தரவிட்டார்.
3. திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4. நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
5. ரிஷிவந்தியம், அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...