ரவி யோகம்


ரவி யோகம்
x
தினத்தந்தி 28 Jun 2019 3:02 PM GMT (Updated: 28 Jun 2019 3:02 PM GMT)

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பத்தாவது இடத்தில் சூரியன் அமர்ந்து, அந்த பத்தாவது வீட்டுக்குஉடைய கிரகம், மூன்றாவது வீட்டில் சனியுடன் இணைந்திருப்பது ரவி யோகம் என்று குறிப்பிடப்படும்.

 உபஜெய ஸ்தானமான பத்தாவது வீட்டில் சூரியன் திக்பலம் அடைவார். லக்னத்திலிருந்து பத்தாவது இடத்துக்கு ஆறாவது இடம் மூன்றாவது வீடாகும். அது மற்றொரு உபஜெய ஸ்தானமாகும். உபஜெய ஸ்தானங்களான 3,6,10 ஆகிய வீடுகளின் தொடர்பு பெறுவதே இந்த ரவி யோகத்தின் சிறப்பாகும்.

 பிறர் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையை இந்த யோகம் ஏற்படுத்துகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நடைமுறை வாழ்வில் அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளராக இருப்பார்கள். மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றவராகவும், எளிமையான உணவு பழக்கவழக்கத்தை கொண்டவராகவும் இருப்பார்கள்.

Next Story