திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதணையும் நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. காலை முதல் மாலை 6 மணி வரை சாமி தரிசனத்திற்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், மாலையில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கோவில் கடற்கரையில் சொக்கப்பனை கொழுத்தப்பட்டது.
பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சொக்கப்பனை நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள், போலீசார் மட்டுமே இருந்தனர்.
இதனால் சொக்கப்பனை கொளுத்தப்பட்ட கடற்கரை பகுதி வெளிச்சோடிக் கிடந்தது.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story