வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 9 Nov 2021 10:21 AM GMT (Updated: 9 Nov 2021 10:21 AM GMT)

திருமூலர் அருளிய திருமந்திரம், திருமுறைகளில் 10-ம் பகுதியாக தொகுக்கப்பட்டுள்ளது. சிவனின் சிறப்புகளை, அவரது குணங்களை எடுத்துரைக்கும் பாடல்களைக் கொண்டிருக்கும் இந்த நூல், சைவ நெறியைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான பாடலும், விளக்கமும் பார்க்கலாம்.

பாடல்:-

இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்

அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்

வருந்தா வகைசெய்து வானவர் கோனும்

பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

விளக்கம்:-

உலக வாழ்வில் தீய நெறிகளில் சென்று, அதனால் துன்பங்களைப் பெற்று அழுகின்றவர்களானாலும், தன் பண்புகளில் இருந்து நீங்கியவர்களானாலும், அவர்கள் அனைவரும் கடவுளை நினைத்து அருந்தவ நெறியில் ஈடுபடத் தொடங்கினால், இறைவனும் அவர்கள் வருந்தாத வண்ணம், அவர்களுடைய துன்பங்களை நீக்கி பாதுகாத்து, மீண்டும் பிறவி ஏற்படாதவாறு பெருந்தன்மையோடு அருள் செய்வான்.


Next Story