வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 25 Jan 2022 7:36 AM GMT (Updated: 25 Jan 2022 7:36 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமூலரால் பாடப்பட்ட திருமந்திர நூல், சிவபெருமான் பெருமையை உணர்த்தும் சிறப்பு மிக்கது. அருட்பெரும் சோதியாய் விளங்கும் சிவபெருமான், அன்பின் எல்லையாகவும் இருப்பதாக திருமூலர் பாடுகிறார். சிறப்புவாய்ந்த திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும், ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

பாடல்:- மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்

மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்

ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தைப்

பேணிப் தொழுதென்ன பேறு பெற்றாரே.

விளக்கம்:- சிவபெருமான் மாணிக்கமாகவும், சக்திதேவி அந்த மாணிக்கத்தின் உள்ளே விளங்கும் மரகத ஒளியாகவும் உள்ளனர். அம்மையே இறைவனுக்கு திருமேனி என்பதால், மரகதமாய் விளங்குகிறார். பொன்னம்பலமாகிய மன்றத்தில் ஈசனான பெருமானின் திருநடனத்தைக் கண்டு தொழுது போற்றுபவர்கள், பெறும் பேற்றை என்னவென்று சொல்வது...

Next Story