ஆடிப்பெருக்கு: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்


ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ராமேஸ்வரம்:

அகில இந்திய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் வருகைதருவர்.

இந்நிலையில் இன்று ஆடி18ஆம் பெருக்கை முன்னிட்டு இன்று அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடவும் மற்றும் சாமியை தரிசனம் செய்யவும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

புனித நீராட பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் கொரோனா பரவல் குறித்து ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் விழிபுணர்வு ஏற்படுத்தினர். மேலும் பக்தர்கள் தங்கள் துணிகளை கடலில் விட்டு செல்வதை தடுக்கும் வகையில் அபராதம் விதித்தனர்.

1 More update

Next Story