வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமூலர் இயற்றிய திருமந்திர நூலின் சிறப்பு சொல்லில் அடங்காதது. அன்பும், சிவமும் வேறு வேறு கிடையாது என்பதை உலகுக்கு எடுத்துரைத்த சிறப்புமிக்க நூல் இது. அதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

ஒன்றெனக் கண்டேன் எம் ஈசன் ஒருவனை

நன்றென்று அடியினை நான் அவனைத் தொழ

வென்று ஐம்புலனும் மிகக்கிடந்து இன்புற

அன்றென்று அருள் செய்யும் ஆதிப்பிரானே.

விளக்கம்:-

சிவபெருமான் ஒருவனே இறைவன் என்று என்னுடைய உள்ளம் தெளியப் பெற்றேன். ஆகையால் அவனது திருவடிகளை முழுமையாகப் பற்றிக்கொண்டு தொழுதேன். ஐம்புலன்களையும் வென்று அடங்கிய நிலையில், இறைவன் நான் இன்புறுமாறு அப்போதே என்னை ஆட்கொண்டு அருளினான்.


Next Story