இந்த வார விசேஷங்கள் (6-2-2024 முதல் 12-2-2024 வரை)


இந்த வார விசேஷங்கள் (6-2-2024 முதல் 12-2-2024 வரை)
x

தை அமாவாசை தினமான 9-ம் தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்படுகிறது.

6-ந் தேதி (செவ்வாய்)

* சர்வ ஏகாதசி.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

* திருவல்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* கீழ்நோக்கு நாள்.

7-ந் தேதி (புதன்)

* பிரதோஷம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* கீழ்நோக்கு நாள்.

8-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்தநாள்.

* மாத சிவராத்திரி.

*திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலையில் நாச்சியார் திருக்கோலம், இரவு யாளி வாகனத்தில் புறப்பாடு.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு சம்புரோசனம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (வெள்ளி)

* தை அமாவாசை.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம்.

* சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்ப உற்சவம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பெரிய வீதியில் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

10-ந் தேதி (சனி)

* திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவிலில் 11 கருட சேவை.

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருநள்ளார் சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

11-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் இரவு குதிரை வாகனத்தில் பவனி.

* திருவைகுண்டம் வைகுண்டபதியில் சுவாமிக்கு பால் அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

12-ந் தேதி (திங்கள்)

* திருமயம் ஆண்டாள், உச்சி கொண்ட கூடாரவல்லி உற்சவம்.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தீர்த்தவாரி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.


Next Story