இந்த வார விசேஷங்கள்: 21-5-2024 முதல் 27-5-2024 வரை


இந்த வார விசேஷங்கள்: 21-5-2024 முதல் 27-5-2024 வரை
x

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்த வாரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களை காண்போம்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்த வாரத்தில் (21-5-2024 முதல் 27-5-2024 வரை) நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களை காண்போம்.

21-ம் தேதி (செவ்வாய் கிழமை)

* பழனி ஆண்டவர் திருக்கல்யாணம், இரவு வள்ளி திருமணக் காட்சி.

* மதுரை கூடலழலகர் யானை வாகனத்தில் பவனி.

* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் வெள்ளி கோ ரத உற்சவம்.

* காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாணம்.

* சமநோக்கு நாள்.

22-ம் தேதி (புதன் கிழமை)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சங்காபிஷேகம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பால் அபிஷேகம்.

* திருப்பத்தூர் சிவபெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம்.

* அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

* சமநோக்கு நாள்.

23-ம் தேதி (வியாழக்கிழமை)

* பவுர்ணமி.

* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

* காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

* உத்தமர்கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கில் பவனி.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.

* கீழ்நோக்கு நாள்.

24-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

* மதுரை கூடலழகர் ரத உற்சவம்.

* பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் சப்தாவர்ணம்.

* காட்டுபருவூர் ஆதிகேசவப் பெருமாள் தெப்பம்.

* சமநோக்கு நாள்

25ம் தேதி (சனிக்கிழமை)

* அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் உலா.

* காஞ்சிபுரம் வரதராசர் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.

* அகோபிலமடம் திருமத் 35-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

* சமநோக்கு நாள்

26-ம் தேதி (ஞாயிற்றுகிழமை)

* முகூர்த்த நாள்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம்.

* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் உலா.

* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

27-ம் தேதி (திங்கட்கிழமை)

* காஞ்சிபுரம் வரதராசர் உபய நாச்சியார்களுடன் ரத உலா.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

* அரியக்குடி சீனிவாசப்பெருமாள் ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.


Next Story