இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, தை-6 (சனிக்கிழமை)

திதி: தசமி, இரவு 10.06க்கு மேல் ஏகாதசி திதி

நட்சத்திரம்: கார்த்திகை, பின்னிரவு 5.32க்கு மேல் ரோகிணி

யோகம்: அமிர்தயோகம்

ராகு காலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருப்பரங்குன்றம் முருகன் வைரத்தேர், திருச்சேறை சாரநாதர் பரமபதநாதன் காட்சி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தி வாகனத்தில் பவனி.

ராசிபலன்

மேஷம்- யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும். தொழிலில் புதிய திட்டங்கள் தீட்டி லாபத்தை பெருக்குவீர்கள்.

ரிஷபம்- நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்- சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்தால் பலன் கிடைக்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோக முயற்சிக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம்,.

கடகம்- காரிய வெற்றி ஏற்படும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து பணிபுரிய நேரிடும்.

சிம்மம்- முன்னேற்றம் ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பறர்கள் உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.

கன்னி- வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.

துலாம்- மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டிய நாள். ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு குறையும்.

விருச்சிகம்- தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.

தனுசு- பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும்.

மகரம்- இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அலங்கார பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் சிலரிடம் கைமாற்றாக கேட்ட பணம் கிடைக்கும்.

கும்பம்- யோகமான நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று முடிவுக்கு வரும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களால் அனுகூலம் கிடைக்கும்.

மீனம்- தடைகள் அகலும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் கல்வி நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.


Next Story