இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x
Muthulingam Basker 27 Dec 2023 10:41 AM IST
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருவாய்மொழி உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-11 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பிரதமை (முழுவதும்)

நட்சத்திரம்: திருவாதிரை நள்ளிரவு 12 மணி வரை, பிறகு புனர்பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று ஸ்ரீ ஆருத்ரா தரிசனம். நடராஜர் அபிஷேகம். நடராஜர் திருநடனம் புரிந்த சிதம்பரம் கனகசபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை, திருஆலங்காடு ரத்தின சபை ஆகிய 5 சபைகளில் அபிஷேகம், அலங்காரம். திருஉத்திரகோசமங்கை கூத்தபிரான், மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம். சடைய நாயனார் குருபூஜை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருவாய்மொழி உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்: தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி சச்சரவு அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்: வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

மிதுனம்: ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கடகம்: வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

சிம்மம்: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவு வந்த நிமிடமே செலவாகலாம். குடும்பத்தினர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகள் வந்து அகலும்.

கன்னி: தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம்.

துலாம்: தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கும் மனநிலை உருவாகும். பயணம் பலன் தரும்.

விருச்சிகம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறையும். குடும்பத்தினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு: வளர்ச்சி கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நண்பர்களிடம் பேசும்பொழுது நாசூக்காக பேசுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

மகரம்: தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வரவேண்டிய கடன் பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும்.

கும்பம்: வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள்.

மீனம்: யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்.


Next Story