பூச்சாட்டுதலுடன் தொடங்கிய பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா


பூச்சாட்டுதலுடன் தொடங்கிய பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 12 March 2024 9:15 AM GMT (Updated: 12 March 2024 9:23 AM GMT)

குண்டம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி அம்மனிடம் வாக்கு கேட்டு உத்தரவு பெறும் நிகழ்ச்சி நடைபெறும்.

சத்தியமங்கலம் அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களும் கேரளாவில் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்து கொள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து பூச்சாட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது .

முன்பாக இரவுசிக்கரசம்பாளையம், சிக்கரசிபாளையம் புதூர், வெள்ளியம்பாளையம் வெள்ளியம்பாளையம் புதூர், காளி திம்பம் சேர்ந்த ஐந்து ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள், தனித்தனியாக தாரை தப்பட்டை முழங்க கோவிலுக்கு வந்தனர். வரும் 26-ம் தேதி குண்டம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி அம்மனிடம் வாக்கு கேட்டு உத்தரவு பெறும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து கோவில் முறையதார் அம்மனின் படைகளத்தை தலையில் வைத்தபடி பண்ணாரி சுற்றியுள்ள சிவன், மாரியம்மன், சருகு மாரியம்மன், ராகு, கேது, முனியப்பன் சாமி, வண்டி முனியப்பன் சாமி கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வந்தார்கள். பின்னர் நேற்று அதிக காலை பண்ணாரி அம்மன் சிலை மீது வெள்ளைஅரளி, மற்றும் சிவப்பு அரளி வைத்து குண்டம் திருவிழா நடக்க உத்தரவு கேட்கப்பட்டது. அப்போது சரியாக 3. 52 மணிக்கு வெள்ளை பூ விழுந்தது. அம்மன் குண்டம் விழாவுக்கு உத்தரவு கொடுத்து விட்டதாக, கோவில் இருந்த பக்தர்கள் அம்மா பண்ணாரி தாயே என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள. தொடர்ந்து நேற்று இரவு பண்ணாரி உற்சவ அம்மன், மற்றும் சருகு மாரியம்மன் சப்பரத்தில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு கோயிலை விட்டு புறப்பட்டு சிக்கரசம்பாவிதத்திற்கு பல்வேறு தோட்ட பகுதிகளின் வழியாக அதிகாலை சென்றது.

இதனைத் தொடர்ந்து அம்மனின் உலா சுமார் 100 கிராமங்களில் வழியாக செல்லும். மேலும் பண்ணாரி கோவில் வளாகத்தில் பக்தர்கள் காத்திருக்க பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 19-03-2024-ம் தேதி குழிகம்பம் சாட்டுதல் 26-03-2024-ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இருக்கும் நிகழ்ச்சியும், 27-ம் தேதி புதன்கிழமை பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பௌர்ணமி திருவிளக்கு பூஜையும், 28-ம் தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், 29-ம் தேதி தங்கதேர் புறப்பாடும்,1.4 2024-ம் தேதி திங்கட்கிழமை மறுபூஜை விழாவும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் அறங்காவலர்களும் அலுவலர்களும் பக்தர்களும் செய்து வருகிறார்கள்.


Next Story