பவானிசங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


பவானிசங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஈரோடு

பவானி

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 8 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவன் குருக்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது. பின்னர் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

திருக்கல்யாணம்

இன்று (வியாழக்கிழமை) ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருடன் ஆதிகேசவ பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனையும், அன்று இரவு சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் அபிஷேக, ஆராதனையும், இரவு திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

வருகிற 30-ந் தேதி காலை ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடும் நடக்க உள்ளது. இதனைத்தொடர்ந்து 1 மற்றும் 2-ந் தேதிகளில் சாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சாமி புறப்பாடும், 3-ந் தேதி காலை ஆதிகேசவ பெருமாள் மற்றும் சீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடக்கிறது.

மஞ்சள் நீராட்டு விழா

அதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு உற்சவமூர்த்திகள் தேரில் ஏற்றப்பட்டு திருவீதி உலா நடைபெற உள்ளது. 4-ந் தேதி காலை வேதநாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவமும், தேர் வீதிஉலாவும் அன்று மாலை மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

5-ந் தேதி காலை அபிஷேக, ஆராதனையும் பரிவேட்டை நிகழ்ச்சியும் சாமி புறப்பாடு மற்றும் தீர்த்த வாரியும் நடக்கிறது.

7-ந் தேதி சாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


Related Tags :
Next Story