சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

கிச்சிப்பாளையம் பகுதியில் தொடங்கிய பால் குட ஊர்வலம் சிட்டி கோவில் தெரு, அருணாசல ஆசாரி தெரு வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை அடைந்தது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் நேற்று பால் குட ஊர்வலம் நடந்தது. கிச்சிப்பாளையம் பகுதியில் தொடங்கிய பால் குட ஊர்வலத்தை கோட்டை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என்.சக்திவேல் தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் சிட்டி கோவில் தெரு, அருணாசல ஆசாரி தெரு வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.


Next Story