முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

நெல்லையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது
நெல்லையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
கந்தசஷ்டி விழா
கந்தசஷ்டி விழா நேற்று முருகன் கோவில்களில் தொடங்கியது. நெல்லையில் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்காக திருப்பணி நடைபெற்று வருவதால் 6 நாட்கள் உள் திருவிழாவாக நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிமை) மாலை 4 மணிக்கு கோவில் முன்பு தாமிரபரணி ஆற்று பகுதியில் நடைபெறுகிறது.
சாலை குமாரசாமி -மேலவாசல்
இதே போல் நெல்லை சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவிலில் நேற்று யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு சொற்பொழிவு, பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 30-ந்தேதி சூரசம்ஹாரமும், அதை தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
பாளையங்கோடடை தெற்கு பஜார் மேலவாசல் முருகன் கோவிலில் நேற்று நடந்த கந்தசஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதே போல் நெல்லை பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், முருகன் சன்னதிகளில் நேற்று கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.






