வனவாசம் புறப்படும் ராமர்


வனவாசம் புறப்படும் ராமர்
x

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு அருகே உள்ள ஹிரேமகளூர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, கோதண்டராமர் சுவாமி கோவில்.

இது 1200 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும். இந்த ஆலயத்தின் கருவறையில், ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றனர். ராமபிரான் நடுவிலும், அவருக்கு வலதுபுறம் சீதாதேவியும், இடதுபுறம் லட்சுமணனும் இருக்கின்றனர். ராமரும், லட்சுமணனும் தங்களது வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் ஏந்தியிருக்கிறார்கள். பொதுவாக ராமபிரானின் ஆலயங்களில் அவரது பாதத்தின் அடியில் அனுமனின் சிலையும் வடிக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு அனுமன் இல்லை. ராமபிரான், வனத்திற்குள் சென்றதும்தான் அனுமனைப் பார்த்தார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் வனவாசத்திற்கு புறப்படும் கோலத்தில் அருள்வதால் அனுமன் இல்லை. மூவரும் வனவாசம் புறப்படுகிறார்கள் என்பதை, அவர்களின் பாதங்களை வைத்தே நாம் கணிக்க முடியும். அதாவது வலது பாதம் நேராகவும், இடது பாதம் சற்றே திரும்பிய நிலையிலும் இருப்பதைக் காணலாம்.


Next Story