பூசாரியூரில் செம்முனீஸ்வரர் சாமி கோவிலில் தேர் திருவிழா;ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


பூசாரியூரில் செம்முனீஸ்வரர் சாமி கோவிலில் தேர் திருவிழா;ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

பூசாரியூர் செம்முனீஸ்வரர் சாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு

பூசாரியூர் செம்முனீஸ்வரர் சாமி கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேர் திருவிழா

அந்தியூர் அருகே பூசாரியூரில் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தோ் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்ெதாடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வந்தது.

நேற்று காலை 9 மணிக்கு முதல் வனபூஜை நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில் இருந்து செம்முனீஸ்வரர், மன்னாதன் சாமி ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பச்சியம்மன், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினார். இதையடுத்து மேளதாளங்கள் முழங்க சாமியின் தேர் மற்றும் பல்லக்கை பக்தர்கள் தங்களுடைய தோளில் சுமந்தபடி சென்றனர். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் சாமியை வழிபட்டனர். வனக்கோவிலை தேர் சென்றடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

இதைத்தொடர்ந்து காவுக்குட்டி என்று சொல்லக்கூடிய ஆடுகளை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிறந்து 10 நாட்களே ஆன ஆட்டுக்குட்டி முதல் ஓராண்டுக்கு மேலான ஆடுகள் வரை ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அப்போது ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்தும், அதில் ஒரு பகுதியை பக்தர்களுக்கும் வழங்கினர். அவ்வாறு பூசாரிகள் கொடுக்கும் ரத்தத்தை பக்தர்கள் வாங்கி தங்களது உடல் மீது பூசி கொண்டனர். இந்த ரத்தத்தை தங்களுடைய உடலில் பூசிக்கொள்ளும் போது தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், குழந்தை வரம் வேண்டி ஆட்டின் ரத்தத்தை தங்களுடைய சேலையின் ஒரு பகுதியில் வாங்கி கொண்டனர்.

சிறப்பு பஸ்

விழாவில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக அந்தியூர், பவானி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கோவில் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதையொட்டி அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story