மதுரை மீனாட்சி ஆலயமும்... கட்டிடமும்..


மதுரை மீனாட்சி ஆலயமும்... கட்டிடமும்..
x

மதுரை மீனாட்சி ஆலயத்தின் கோபுரங்களும், மண்டபங்களும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். அவற்றில் சில எந்த காலகட்டத்தில் உருவானது என்பதை இங்கே பார்க்கலாம்.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் நடைபெற்ற திருத்தலம் என்ற சிறப்புக்குரியது, மதுரை. இங்கு அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலும், அந்த ஆலயத்தில் இருக்கும் பொற்றாமரைக் குளமும், சங்க காலத்திற்கும் முன்பே இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது கோவிலும், குளமும் சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

ஆனால் அந்த ஆலயத்தின் கோபுரங்களும், மண்டபங்களும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். அவற்றில் சில எந்த காலகட்டத்தில் உருவானது என்பதை இங்கே பார்க்கலாம்.

சுவாமி கோபுரம் - 1168-75-ம் ஆண்டு

கிழக்கு ராஜகோபுரம் - 1216-38-ம் ஆண்டு

மேற்கு ராஜகோபுரம் - 1315-47-ம் ஆண்டு

சுவாமி சன்னிதி கோபுரம் - 1372-ம் ஆண்டு

சுவாமி சன்னிதி மேற்கு கோபுரம் - 1374-ம் ஆண்டு

ஆறுகால் மண்டபம் - 1452-ம் ஆண்டு

நூறு கால் மண்டபம் - 1526-ம் ஆண்டு

தெற்கு ராஜகோபுரம் - 1559-ம் ஆண்டு

சுவாமி சன்னிதி வடக்கு கோபுரம் - 1560-ம் ஆண்டு

தேரடி மண்டபம் - 1562-ம் ஆண்டு

பழைய ஊஞ்சல் மண்டபம் - 1563-ம் ஆண்டு

வடக்கு ராஜகோபுரம் - 1564-72-ம் ஆண்டு

வெள்ளி அம்பல மண்டபம் - 1564-72-ம் ஆண்டு

சித்திர கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், நாயன்மார் மண்டபம் - 1569-ம் ஆண்டு

அம்மன் சன்னிதி மேற்கு கோபுரம் - 1570-ம் ஆண்டு

வீர வசந்தராயர் மண்டபம் - 1611-ம் ஆண்டு

இருட்டு மண்டபம் - 1613-ம் ஆண்டு

புது ஊஞ்சல் மண்டபம் - 1623-ம் ஆண்டு

அம்மன் சன்னிதி கோபுரம் - 1627-ம் ஆண்டு

முக்குறுணி விநாயகர் - 1645-ம் ஆண்டு


Next Story