காரைக்கால் கோட்டுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் மகாகும்பாபிஷேகம்


காரைக்கால் கோட்டுச்சேரி வரசித்தி விநாயகர் கோவிலில் மகாகும்பாபிஷேகம்
x

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று காலை மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் பிரசித்திபெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் சேதமடைந்ததால் பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன. கடந்த 24-ந் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக திருவிழாவில், தினம் யாக கால பூஜைகள் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், அதனை தொடந்து கடம் புறப்பாடும், பின்னர் கோவில் கோபுர விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் மூலவர் விநாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் திருக்கயிலாயபரம்பரை தருமை ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

1 More update

Next Story