சிவபெருமானின் மந்திர பலன்


சிவபெருமானின் மந்திர பலன்
x

சிவபெருமானின் முதன்மையான மந்திரமாக திகழ்வது, ‘நமசிவய’ மற்றும் ‘சிவயநம’ என்பதாகும். இந்த மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை, தினமும் ஒரு மணி நேரம் உச்சரிப்பதால், கிடைக்கும் பலன்களாக ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கும் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

* இந்த மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக உச்சரிப்பதால், அந்த ஒரு மணி நேரமும் மவுன விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

* உத்தமன் போல் உண்மையை பேசியவராவீர்கள்.

* மரணத்தைப் பற்றிய பயம் விலகும்.

* சிவ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

* செய்த பாவங்களை போக்க, பிராயசித்தம் செய்ததாக அமையும்.

* இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாக உணர்வீர்கள்.

* நான்கு மறைகளையும் ஓதிய பலன் கிடைக்கும்.

* பெரியோர்களின் சொல்பேச்சை கேட்ட பலன் கிடைக்கும்.

* மகான்களின் ஆசியைப் பெறுவீர்கள்.

* ஐம்புலன்களை அடக்கி வெற்றி கண்டவர் ஆவீர்கள்.

* ஒரு மணி நேரம் தியானம் செய்த பலன் பெறுவீர்கள்.

* ஒரு மணி நேரம் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.

* ஒரு மணி நேரம் ஒழுக்கமானவராக வாழ்ந்த திருப்தியடைவீர்கள்.

* சில வேள்விகளை செய்தவராவீர்கள்.

* கங்கை, யமுனை, காவிரி, வைகையில் நீராடிய பலன் பெறுவீர்கள்.

* கயிலாயத்தில் வசித்த உணர்வைப் பெறுவீர்கள்.

* கோடி கோடியான புண்ணியத்தை சம்பாதிப்பீர்கள்.

* நாம் வேறு.. சிவம் வேறு இல்லை என்பதை உணர்வீர்கள்.

தினமும் ஒரு மணி நேரம் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரித்தாலே இவ்வளவு பலன்கள் என்றால், கடமைகளைச் செய்தபடியே, சதாசர்வ காலமும் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரித்து வந்தால், எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

1 More update

Next Story