மாசி பிரம்மோற்சவம்.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


மாசி பிரம்மோற்சவம்.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

பொதுதரிசன வழியில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி,

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் காலை, இரவு என இரு வேளைகளில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நான்காம் நாளான நேற்று மலைக்கோவிலில் பல்லக்கு சேவை நடைபெற்றது. இதில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி முருகன் மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொதுதரிசன வழியில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

விழாவையொட்டி, பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு வெள்ளி நாக வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story