திருத்தணி முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்


திருத்தணி முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 15 Feb 2024 8:40 AM GMT (Updated: 15 Feb 2024 11:37 AM GMT)

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா 21-ம் தேதியும், திருக்கல்யாணம் 22-ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மலைக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இன்று இரவு 7 மணிக்கு முருகப்பெருமான் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா 21-ம் தேதியும், திருக்கல்யாணம் 22-ம் தேதியும் நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story