மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா


மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா
x

தூத்துக்குடி மாவட்டம், மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.

இதையொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா மார்ச் 24ம் தேதி கும்பாபிஷேக விழாவுடன் நிறைவு பெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story