அக்னி நட்சத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

அக்னி நட்சத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில்  சிறப்பு அபிஷேகம்
x

அக்னி நட்சத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஈரோடு

சென்னிமலை

அக்னி நட்சத்திர விழாவையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

சென்னிமலை முருகன் கோவிலில் சித்திரை மாத அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் கங்கை, யமுனை, கோதாவரி, தாமிரபரணி, காவிரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் தீர்த்தக்குடங்களுடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வந்து மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தரிசனம்

மேலும் மகா அபிஷேகம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளும், அதனைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story