அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேக விழா கோலாகலம்


அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேக விழா கோலாகலம்
x

விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன.


இதைத் தொடர்ந்து 10-ம் திருநாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. காலை ஹோமம் வளர்க்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
  • chat