பிரதோஷ சிறப்பு வழிபாடு

பிரதோஷ சிறப்பு வழிபாடு
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற திருப்பன்கூர் சிவலோகநாதசாமி கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமி மற்றும் நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் செய்திருந்தார். இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரதோஷ நாயகர் புறப்பாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார். பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவில், திருமுல்லைவாசல் முல்லை வனநாதசாமி கோவில், கண்ணப்பன்பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், தலைச்சங்காடு சங்கரனேஸ்வரர் கோவில், நாங்கூர் நம்புவார்க்கு அன்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






