அருளை வாரி வழங்கும் அம்மனின் சக்தி பீடங்கள்


அருளை வாரி வழங்கும் அம்மனின் சக்தி பீடங்கள்
x

கடந்த வாரம் முதல் 25 சக்தி பீடங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் மீதமுள்ள சக்தி பீடங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

ஒரு முறை பார்வதி தேவி தட்சனின் மகளாக, தாட்சாயிணி என்ற பெயரில் பிறந்து, சிவபெருமானை மணந்தாள். சிவபெருமானின் மீது கோபத்தில் இருந்த தட்சன், தான் நடத்திய மிகப்பெரிய யாகத்திற்கு, சிவபெருமானை அழைக்கவில்லை. அவருக்கான அவிர்பாகத்தைக் கொடுக்கவும் தயாராக இல்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்று, அங்கிருந்து யாக குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்தாள். சிவபெருமான், மனைவி தாட்சாயிணியின் உடலை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் பிரபஞ்சமே நடுங்கியது. உலகின் உயிர்களுக்கு ஆபத்து நிகழக்கூடாது என்பதற்காக, மகாவிஷ்ணு, தன்னுடைய சக்கராயுதத்தை வீசி, தாட்சாயிணியின் உடலை பல பாகங்களாக வெட்டி வீசினார். அந்த உடல் பாகங்கள் மற்றும் ஆபரணங்கள் விழுந்த இடங்களில் உருவான அம்மன் தலங்கள் 'சக்தி பீடங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இப்படி 51 சக்தி பீடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலர்

108 சக்தி பீடங்கள் என்றும் சொல்வார்கள். கடந்த வாரம் முதல் 25 சக்தி பீடங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் மீதமுள்ள சக்தி பீடங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

26-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - கீழ் பல்வரிசை

விழுந்த இடம் - பஞ்சசாகரம், ஹரித்வார், உத்ரகாண்ட்

தேவியின் பெயர் - வராகி

பைரவர் பெயர் - மஹாருத்ர பைரவர்

27-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது கை

விழுந்த இடம் - கேதுப்ரஹ்மம் கிராமம், மேற்கு வங்காளம்

தேவியின் பெயர் - மஹீலா

பைரவர் பெயர் - பீருக பைரவர்

28-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - கை விரல்கள்

விழுந்த இடம் - பிரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம்

தேவியின் பெயர் - லலிதா

பைரவர் பெயர் - பவ பைரவர்

29-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - வயிறு

விழுந்த இடம் - சோம்நாத், குஜராத்

தேவியின் பெயர் - ஸந்த்ரபாஹா

பைரவர் பெயர் - வக்ரதுண்ட பைரவர்

30-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - கேசம்

விழுந்த இடம் - மதுரா (பிருந்தாவனம்), உத்திர பிரதேசம்

தேவியின் பெயர் - உமா

பைரவர் பெயர் - உமேச பைரவர்

31-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - மேல் உதடு

விழுந்த இடம் - உஜ்ஜையினி, மத்தியபிரதேசம்

தேவியின் பெயர் - அவநதி

பைரவர் பெயர் - லம்பகர்ண பைரவர்

32-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - மணிக்கட்டு

விழுந்த இடம் - புஷ்கர், ராஜஸ்தான்

தேவியின் பெயர் - காயத்ரி

பைரவர் பெயர் - சர்வானந்த பைரவர்

33-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது கணுக்கால்

விழுந்த இடம் - பாட்னா, பீகார்

தேவியின் பெயர் - ஸர்வானந்தகிரி

பைரவர் பெயர் - வ்யாமகேச பைரவர்

34-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - வலது முன் கை

விழுந்த இடம் - மானஸரோவர் ஏரி, கயிலாயம், திபெத்.

தேவியின் பெயர் - தாட்சாயணி தேவி

பைரவர் பெயர் - அமர பைரவர்

35-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது தோள்

விழுந்த இடம் - உச்சயத், பீகார்

தேவியின் பெயர் - உமா

பைரவர் பெயர் - மஹோதர பைரவர்

36-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது முன் கை

விழுந்த இடம் - ஜெய்ஷோர், பங்களாதேஷ்

தேவியின் பெயர் - யசோ ரேஸ்வரி

பைரவர் பெயர் - சண்ட பைரவர்

37-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - வலது தோள்

விழுந்த இடம் - குளித்தலை, தமிழ்நாடு

தேவியின் பெயர் - குமாரி

பைரவர் பெயர் - சிவா பைரவர்

38-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - வலது மார்பு

விழுந்த இடம் - மைஹர், உத்திர பிரதேசம்

தேவியின் பெயர் - ஷிவானி

பைரவர் பெயர் - சண்ட பைரவர்

39-வது சக்திபீடம்

விழுந்த ஆபரணம் - அன்னையின் கால் சலங்கை

விழுந்த இடம் - திரிகோணமலை, இலங்கை

தேவியின் பெயர் - இந்த்ராட்சி

பைரவர் பெயர் - ராட்சேஸ்வர பைரவர்

40-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - நெஞ்சு

விழுந்த இடம் - பாபஹரா (மயானம்), துப்ராஜ்பூர், மேற்கு வங்காளம்

தேவியின் பெயர் - மஹிஷாஸுர மர்த்தினி

பைரவர் பெயர் - வக்ரநாத பைரவர்

41-வது சக்திபீடம்

விழுந்த ஆபரணம் - அன்னையின் குண்டலங்கள்

விழுந்த இடம் - மணிகர்ணிகா, காசி-வாரணாசி, உத்திர பிரதேசம்

தேவியின் பெயர் - விசாலாட்சி

பைரவர் பெயர் - கால பைரவர்

42-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது கணுக்கால்

விழுந்த இடம் - பஞ்சகுரா, மேற்கு வங்காளம்

தேவியின் பெயர் - கபாலினி

பைரவர் பெயர் - பீம பைரவர்

43-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது கால் பெருவிரல்

விழுந்த இடம் - வைராட், ஜெய்ப்பூர்

தேவியின் பெயர் - அம்பிகா

பைரவர் பெயர் - அம்ருதாட்ச பைரவர்

44-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இருதயம்

விழுந்த இடம் - ஹவுரா, ஜார்கண்ட்

தேவியின் பெயர் - ஜெய துர்க்கா

பைரவர் பெயர் - வைத்யநாத பைரவர்

45-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது கணுக்கால்

விழுந்த இடம் - பாஉர்பாக், மெகாலயா

தேவியின் பெயர் - ஜெயந்தி

பைரவர் பெயர் - க்ரமதீஸ்வர பைரவர்

46-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - முகவாய்க் கட்டை

விழுந்த இடம் - திருவானைக்காவல், தமிழ்நாடு

தேவியின் பெயர் - அகிலாண்டேஸ்வரி

பைரவர் பெயர் - விக்ருதாட்ச பைரவர்

47-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - இடது மார்பு

விழுந்த இடம் - ஜலந்தர், பஞ்சாப்

தேவியின் பெயர் - திரிபுர மாலினி

பைரவர் பெயர் - பீட்சண பைரவர்

48-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - நாக்கு

விழுந்த இடம் - ஜூவாலாமுகி, இமாச்சலப் பிரதேசம்

தேவியின் பெயர் - சித்திதா (ஜூவாலை வடிவில்)

பைரவர் பெயர் - உன்மத்த பைரவர்

49-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - கழுத்தின் கீழ்பகுதி

விழுந்த இடம் - மல்லிகார்ஜூனம், ஸ்ரீசைலம்

தேவியின் பெயர் - பிரம்மராம்பிகாம் பாள்

பைரவர் பெயர் - சம்பராநந்த பைரவர்

50-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - வலது புட்ட சதை

விழுந்த இடம் - ஸ்ரீ பர்வதம், ஜம்மு காஷ்மீர்

தேவியின் பெயர் - சுந்தரி

பைரவர் பெயர் - சுந்தரானந்த பைரவர்

51-வது சக்திபீடம்

விழுந்த அங்கம் - தலையின் உச்சிக்குழி

விழுந்த இடம் - ஹிஸ்கோஸ் நதிக்கரை, பலுசிஸ்தான்

தேவியின் பெயர் - கோடரி (ஜூவாலை வடிவில்)

பைரவரின் பெயர் - பீமலோசன பைரவர்


Next Story