காட்பாடியில் லட்சுமி குபேரர் சிறப்பு பூஜை
உற்சவர் சிலைக்கு 108 வெள்ளி நாணயங்கள் கொண்டு குபேர பூஜை நடைபெற்றது.
சென்னை வண்டலூர் ரத்தினமங்கலத்தில் லட்சுமி குபேரர் கோவில் உள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரனுக்கு என்று தனிக் கோவில் இருப்பது இங்கு மட்டும்தான். இந்நிலையில், லட்சுமி குபேரர் உற்சவர் சிலை தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்காக வெளியே கொண்டு வரப்பட்டது. ஜூலை 7-ந் தேதி தொடங்கிய இந்த சிறப்பு தரிசனம் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
அவ்வகையில் காட்பாடி காந்தி நகருக்கு லட்சுமி குபேரர் உற்சவ மூர்த்தி நேற்று முன்தினம் வருகை தந்தது. காட்பாடி காந்திநகர் ஸ்ரீ ஜனனீ பேலசில் லட்சுமி குபேரர் சிறப்பு பூஜை நடந்தது.
பூஜைக்கு ஜனனீ பிக்பஜார் நிர்வாக இயக்குனர்கள் ஜனனீ பி.சதீஷ்குமார், தனலட்சுமி சதீஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பூஜையை முன்னிட்டு காலையில் கோ பூஜை நடந்தது.
உற்சவர் சிலைக்கு 108 வெள்ளி நாணயங்கள் கொண்டு குபேர பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஜனனீயின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
குபேர பூஜையை ராஜலட்சுமி குபேர டிரஸ்ட் மற்றும் கோவில் நிறுவனர் குபேரகிருஷ்ணன் நடத்தினார். பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.
குபேர பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குபேர சிலைக்கு அர்ச்சனை செய்யப்பட்ட 5 ரூபாய் நாணயம் மற்றும் குங்குமப்பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional