வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

மூவாயிரம் பாடல்களைக் கொண்டு ஈசனைப் பற்றியும், அவரது அருள் குறித்தும், சிவன் எப்படிப்பட்டவர் என்பது பற்றியும், யோக நிலைகள், உடலின் இயக்கங்கள் என்று அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்தியவர், திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் என்னும் அந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

வைத்தேன் அடிகள் மனத்தினுள்ளே நான்

பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்

எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு

மெய்த்தேன் அறிந்தேன் அவ்வேதத்தின் அந்தமே.

விளக்கம்:- சிவபெருமான் திருவடிகளை என் உள்ளத்தின் உள்ளே வைத்தேன். அதனால் பொய்யான மாய வாழ்வில் புலன்களின் வழி சென்று அழிந்து போகாமல் நான் இருந்தேன். துன்ப வாழ்வை மீண்டும் மீண்டும் உண்டாக்கும் இருவினை நீங்கினேன். மெய்யறிவாகிய திருவடி இன்பத்தேனை அறிந்தேன். அதுவே உண்மை அறிவின் எல்லையாகும்.


Next Story