தித்திக்கும் திருவிளையாடல் புராணம்


தித்திக்கும் திருவிளையாடல் புராணம்
x
தினத்தந்தி 9 May 2023 4:00 PM GMT (Updated: 9 May 2023 4:00 PM GMT)

ஈசனின் ஒவ்வொரு திருவிளையாடலும் ஒவ்வொரு படலமாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி அமைந்த படலங்களை இங்கே பார்க்கலாம்.

'திருவிளையாடல்' என்றாலே, சிவபெருமான் தான் நம் நினைவுக்கு வருவார். ஏனெனில் இந்த மண்ணில் அவர் நடத்திய விளையாட்டுக்கள் அவ்வளவு பிரசித்தமானவை. ஈசன் அதிகமாக தன்னுடைய திருவிளையாடல்களை நடத்தியது, மதுரையில்தான். அவரது திருவிளையாடல்களைக் கூறும் நூலாக, 'திருவிளையாடல் புராணம்' திகழ்கிறது. இதனை பரஞ்சோதி முனிவர் என்பவர் இயற்றியிருக்கிறார். இந்த நூலில் மதுரை காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய் காண்டம் ஆகிய மூன்று காண்டங்கள் உள்ளன. இந்த காண்டங்களில் முறையே 18, 30, 16 என்ற வகையில் படலங்கள் பிரிக்கப்பட்டு 3 ஆயிரத்து 363 செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளது. இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு பற்றி சொல்கின்றன. பின் வரும் செய்யுள்கள்தான் ஈசனின் திருவிளையாடல் பற்றி கூறுகிறது.

இந்திரன் பழி தீர்த்த படலம்.

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்.

திருநகரங்கண்ட படலம்.

தடாதகைப் பிராட்டியார் திருஅவதாரப் படலம்.

தடாதகையாரின் திருமணப் படலம்.

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.

அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்.

ஏழுகடல் அழைத்த படலம்.

மலயத்துவசனை அழைத்த படலம்.

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்.

உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.

கடல் சுவற வேல்விட்ட படலம்.

இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.

மேருவைச் செண்டாலடித்த படலம்.

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்.

மாணிக்கம் விற்ற படலம்.

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.

நான்மாடக்கூடலான படலம்.

எல்லாம் வல்ல சித்தரான படலம்.

கல் யானைக்குக் கரும்பு தந்த படலம்.

யானை எய்த படலம்.

விருத்த குமார பாலரான படலம்.

கால் மாறி ஆடிய படலம்.

பழியஞ்சின படலம்.

மாபாதகம் தீர்த்த படலம்.

அங்கம் வெட்டின படலம்.

நாகமேய்த படலம்.

மாயப்பசுவை வதைத்த படலம்.

மெய் காட்டிட்ட படலம்.

உலவாக்கிழி அருளிய படலம்.

வளையல் விற்ற படலம்.

அட்டமாசித்தி உபதேசித்த படலம்.

விடையிலச்சினை இட்ட படலம்.

தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்.

ரசவாதம் செய்த படலம்.

சோழனை மடுவில் வீழ்த்திய படலம்.

உலவாக் கோட்டை அருளிய படலம்.

மாமனாக வந்து வழக்குரைத்த படலம்.

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்.

விறகு விற்ற படலம்.

திருமுகம் கொடுத்த படலம்.

பலகை இட்ட படலம்.

இசைவாது வென்ற படலம்.

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்.

பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்.

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

நாரைக்கு முத்தி கொடுத்த படலம்.

திருவாலவாயான படலம்.

சுந்தரப்பேரம் செய்த படலம்.

சங்கப்பலகை கொடுத்த படலம்.

தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்.

கீரனைக் கரையேற்றிய படலம்.

கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.

சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்.

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்.

வலை வீசின படலம்.

வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்.

நரி பரியாக்கிய படலம்.

பரி நரியாக்கிய படலம்.

மண் சுமந்த படலம்.

பாண்டியன் சுரம் தீர்த்த படலம்.

சமணரைக் கழுவேற்றிய படலம்.

வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம்.


Next Story