இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 14 Feb 2024 6:59 AM IST (Updated: 14 Feb 2024 7:50 AM IST)
t-max-icont-min-icon

மீன ராசிக்காரர்களுக்கு உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் பணிபுரியும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் மாசி மாதம் 2-ந்தேதி புதன் கிழமை.

திதி: பஞ்சமி திதி மாலை(5.52)க்கு மேல் சஷ்டி திதி.

நட்சத்திரம்: ரேவதி நட்சத்திரம் மாலை(4.03)க்கு மேல் அஸ்வினி நட்சத்திரம்.

யோகம்: மரணயோகம். சமநோக்குநாள். வசந்த பஞ்சமி.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

இன்று வசந்த பஞ்சமி. திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம், சுவாமி பெரிய தந்தப் பல்லக்கில் பவனி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம். வேதாரண்யம் சிவபெருமான் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கோவை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

ரிஷபம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

மிதுனம்: வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உதிரி வருமானம் உண்டு. வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

கடகம்: முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவர். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.

சிம்மம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். மருத்துவ செலவுகள் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கன்னி: மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது.

துலாம்: பாராட்டும், புகழும் கூடும் நாள். பயணங்களால் பலன் உண்டு. வீட்டு செலவுகள் அதிகரிக்கும். மறக்கமுடியாத புதிய அனுபவங்களை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தனுசு: துணிவும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வரலாம்.

மகரம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிதானம் தேவை. நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலையாட்களிடம் போராடி வேலை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

கும்பம்: நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

மீனம்: முன்னேற்றம் கூட முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு செய்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

சந்திராஷ்டமம்: மாலை 4.04 வரை சிம்மம்; பிறகு கன்னி.


Next Story