இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

திருப்போரூர் முருகப் பெருமான் பரிவேட்டைக்கு எழுந்தருளல்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 10 (வியாழக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திரயோதசி பகல் 2.40 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: பூசம் மாலை 5.53 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

கும்பகோணம் சக்கரபாணி கும்பாபிஷேகம். கோவை கோணியம்மன் பவனி. திருப்போரூர் முருகப் பெருமான் பரிவேட்டைக்கு எழுந்தருளல்.

ராசிபலன்

மேஷம்

தாராளமாக செலவிட்டு மகி ழும் நாள். தக்க விதத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வருவீர் கள், உடன்பிறப்புகள் உங்களோடு இணைந்து செயல்படுவர்.

ரிஷபம்

போராடும் நிலை மாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள் வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

நீண்ட நாள் எண்ணம் நிறை வேறும் நாள். வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபல மாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல் கள் அகலும். சுபகாரியப்பேச்சு முடிவாகும். உத்தியோகத் தடை அகலும்.

கடகம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அரசு பணிக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக் கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர், காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

சிம்மம்

சிந்தனைகள் வெற்றி பெறும் அதிசய முடிவெடுத்து அனைவ நாள். நம்பிக்கைகுரியவர்கள் சில | காரியங்களை முடித்துக் கொடுப்பர். விரோதிகள் விலகுவர். வீடு வாங்கும் வாய்ப்புக் கைகூடும். வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி

முன்யோசனையுடன் செயல் படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாள். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர்.

துலாம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியமளிக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். கல்யாண முயற்சி கைகூடும்.

விருச்சிகம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

தனுசு

குழப்பங்கள் அதிகரிக்கும் நாள், கொடுத்த பணத்தை போராடி வாங்கும் சூழ்நிலை உருவாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மகரம்

சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி ஏற்படும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

கும்பம்

அதிசய முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். நாடிச்சென்று பார்க்க நினைத்தவர்கள் உங்களைத்தேடி வருவர். தொழில் சீராக நடைபெறும்.

மீனம்

அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள அதிகம் செலவிடும் நாள். காரிய வெற்றிக்கு உடன் பிறப்புகளின் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது.


Next Story