இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 2 April 2024 1:16 AM GMT (Updated: 2 April 2024 2:33 AM GMT)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 20-ந்தேதி செவ்வாய்க்கிழமை.

திதி: அஷ்டமி திதி மாலை(3.36)க்கு மேல் நவமி திதி.

நட்சத்திரம்: பூராடம் நட்சத்திரம் இரவு(6.30)க்கு மேல் உத்ராடம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். கீழ்நோக்குநாள். அஷ்டமி.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி காலை பல்லக்கு, இரவு புஷ்பப் பல்லக்கில் வீதியுலா. கொட்டியம் ஸ்ரீ காளியம்மன் தேரோட்டம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். தாய மங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் அன்ன வாகன பவனி. உப்பிலியப்பன் கோவிலில் காலை சூர்ணாபிஷேகம். திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: மனக்கலக்கம் அகலும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகளை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

மிதுனம்: வியாபாரப் போட்டிகளைச் சமாளிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகளால் நன்மை ஏற்படும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

கடகம்: வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

சிம்மம்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நீண்ட நாள் நண்பர்கள் ஒருவரின் உதவி கிட்டும். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும். குடும்பத்துடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

கன்னி: நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆதாயம் தரும் விதத்தில் பயணமொன்று அமையும்.

துலாம்: நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நாட்டுப்பற்றுமிக்கவர்களின் ஒத்துழைப்பால் வீட்டுப் பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு.

விருச்சிகம்: நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்தப் புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: இல்லத்தில் நல்ல சம்பவம் நடை பெறும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரணப்பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

மகரம்: உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

கும்பம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடையூறு சக்திகள் அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி உண்டு.

மீனம்: மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

சந்திராஷ்டமம்: இரவு 12.14 வரை ரிஷபம்; பிறகு மிதுனம்.


Next Story