இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மதுரை மீனாட்சி-சொக்கநாதர் வேடர்பறி லீலை.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 3-ந்தேதி செவ்வாய்க்கிழமை.

திதி: அஷ்டமி திதி மாலை(5.42)க்கு மேல் நவமி திதி.

நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம் காலை (7.08)க்கு பூசம் பரணி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 5.15 மணி முதல் 6.00 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் நாள். சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம். மதுரை மீனாட்சி-சொக்கநாதர் வேடர்பறி லீலை. மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று விழா.

ராசிப்பலன்:

மேஷம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்துப்பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஆதரவு உண்டு.

ரிஷபம்

கனிவாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்ளும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்துவரும் செய்தியால் வியப்படைவீர்கள்.

மிதுனம்

நெருக்கடி நிலையை சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குாலுக்கு செவிசாய்ப்பர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

கடகம்

யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகலாம்.

சிம்மம்

கூடப்பிறந்தவர்களால் கூடுதல் வாழ்க்கைத்தரம் நன்மை கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.

துலாம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தப்பட்ட வகையில் விழிப்புணர்ச்சி தேவை.

விருச்சிகம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.

தனுசு

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் விரயங்கள் கூடும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதி காரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மகரம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணி புரியலாமா என்று சிந்திப்பீர்கள்.

கும்பம்

உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். கட்டிடப் பணிகள் தொடரும்.

மீனம்

எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்கும்.


Next Story