இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை எழுந்தருளல்.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் சித்திரை மாதம் 10-ந்தேதி செவ்வாய்க்கிழமை.

திதி: பவுர்ணமி திதி இரவு (5.48)க்கு மேல் பிரதமை திதி .

நட்சத்திரம்: சித்திரை நட்சத்திரம் இரவு (10.59)க்கு மேல் சுவாதி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

நல்லநேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை எழுந்தருளல். சென்னை கேசவ பெருமாள் விழா தொடக்கம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

மகத்துவம் கிடைக்க மால்மருகனை வழிபட வேண்டிய நாள். செல்வநிலை உயரும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

ரிஷபம்

யோகமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானாகத் தேடிவரும். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.

மிதுனம்

கனவுகள் நனவாகும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளும் சூழ்நிலை உண்டு. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் தொழில் முன்னேற்றம் உண்டு.

கடகம்

நட்பால் நன்மை கிட்டும் நாள். செல்வாக்கு உயரும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு வருவது பற்றிய தகவல் கிடைக்கும்.

சிம்மம்

வெற்றிச்செய்திகள் வீடு தேடி வரும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்துதவுவர். அரை குறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்

கன்னி

ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். குறைசொல்லியவர்கள் கூட பாராட்டுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

துலாம்

முன்னேற்றம் கூடும் நாள். திட்ட மிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. வங்கிச் சேமிப்பு உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

விருச்சிகம்

சிறப்பான வாழ்வமைய சித்ர குப்தனை வழிபட வேண்டிய நாள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

தனுசு

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வேலைக்கு விண்ணபித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

மகரம்

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.

கும்பம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் நல்ல முறையில் பணி புரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற முயற்சிப்பீர்கள்,

மீனம்

தடைகள் அதிகரிக்கும் நாள். தன விரயம் உண்டு. பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

சந்திராஷ்டமம்: காலை 9.54 வரை கும்பம். பிறகு மீனம்.


Next Story