இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிட நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-15 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தி இரவு 11.51 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம்: மகம் (முழுவதும்)

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: காலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிட நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருவாய்மொழி உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராக பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்

வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உடன்பிறப்புகள் வழியில் சுபநிகழ்வுகள் நடைபெறும்.

மிதுனம்

உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்பச்செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கடகம்

பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள். கெளரவம், அந்தஸ்து உயரும். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம்.

சிம்மம்

எடுத்த காரியங்களை எளிதில் முடிக்கும் நாள். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகன யோகம் உண்டு.

கன்னி

விரயங்கள் கூடும் நாள். வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பை வழங்குவர்.

துலாம்

வரவை விட செலவு கூடும் வளர்ச்சியில் தளர்ச்சி நாள். ஏற்படும். தொலைபேசி வழித்தகவல் தொலைதுாரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விருச்சிகம்

காதினிக்கும் செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு.

தனுசு

வரவும் செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

மகரம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் உண்டு. எதையும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கும்பம்

பற்றாக்குறை தீர்ந்து பண வரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் மனம் மாறுவர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

மீனம்

யோகமான நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். வியாபார விருத்தி உண்டு. உடல்நலனில் கவனம்தேவை. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.


Next Story