இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மகர ராசிக்காரர்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை.

திதி: திருதியை திதி மாலை(5.06)க்கு மேல் சதுர்த்தி திதி.

நட்சத்திரம்: மகம் நட்சத்திரம் பகல்(3.18)க்கு மேல் பூரம் நட்சத்திரம்.

யோகம்: மரணயோகம் பகல் (3.18)க்கு மேல் சித்தயோகம்.

சூலம்: மேற்கு

எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துகுமார சாமி திருவிழா தொடக்கம். ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரானுக்கு பாலாபிஷேகம். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம். திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் விஸ்வரூப தரிசனம்.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: பம்ரபமாக சுழன்று பணிபுரியும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலத்தில் சிறு இடையூறுகள் ஏற்பட்டு அகலும்.

ரிஷபம்: எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. முக்கிய புள்ளிகள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

மிதுனம்: நன்மைகள் நடைபெறும் நாள். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவரவு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கடகம்: தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்: அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனைகட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

கன்னி: செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேமிப்பீர்கள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.

துலாம்: யோகமான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: தனவரவு திருப்தி தரும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோக நலன்கருதி ஊர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

மகரம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். நேசித்த சொந்தங்கள் பகை ஆகலாம். நிழல்போல கடன்சுமை தொடரும். உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படலாம்.

கும்பம்: வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.

மீனம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உறவினர் பகை ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

சந்திராஷ்டமம்: மகரம்.


Next Story