இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தனுசு ராசிக்காரர்கள் குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது வருடம் தை மாதம் 15-ந் தேதி திங்கட்கிழமை
திதி: சதுர்த்தி திதி நாள் முழுவதும்
நட்சத்திரம்: பூரம் நட்சத்திரம் மாலை(5.52)க்கு மேல் உத்திரம் நட்சத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள் :
சங்கடகர சதுர்த்தி. வெற்றிகள் குவிய விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். சங்கரன்கோவில் கோமதியம்மன் மலர் பாவாடை தரிசனம். திருத்தணி முருகனுக்கு பாலபிஷேகம் . திருமயம் ஆண்டாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாராதனம் நிகழ்ச்சி.
இன்றைய ராசிபலன் :
மேஷம்: நன்மைகள் நடைபெறும் நாள். அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். உத்தியோக நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும்.
ரிஷபம்: முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் வளர்ச்சியை கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். வரவு திருப்தி தரும்.
மிதுனம்: பொதுநல ஈடுபாட்டால் புகழ்கூடும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சினை ஒன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் விலகும்.
கடகம்: முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுக்கும் நாள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரலாம். உத்தியோகத்தில் இருந்த வேலைச்சுமை குறையும்.
சிம்மம்: பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாள். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். புது ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை தருவர்.
கன்னி: தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.
துலாம்: ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். எதிர்பாராத விதத்தில் பணவரவு வந்து சேரும், உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
விருச்சிகம்: நண்பர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள், வரவு திருப்தி தரும். நேற்றைய பணி மீண்டும் தொடரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
தனுசு: ஆலய வழிபாட்டில் ஆர்வம்காட்ட வேண்டிய நாள். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.
மகரம்: மகிழ்ச்சி குறையும் நாள். நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. உறவினர்கள் பகை உண்டு. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நம்பிக்கை கூடும் நாள்.
மீனம்: பொருளாதார நிலை உயரும் நாள், விலை உயர்ந்த பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யும் முயற்சி கைகூடும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
சந்திராஷ்டமம்: இரவு 12.29 வரை மகரம்; பிறகு கும்பம்.